Sunday, July 20, 2014

தினேஷ் நல்லசிவம் கடிதம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு.., நலம் அறிய ஆவல் சார் …, சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு “பின் தொடரும் நிழலின் குரல் ” நாவலை வாசிக்க ஆரம்பித்தேன் வழக்கம் போல எந்த முன்முடிவுகளும் இன்றி . ஆனால் படிக்க படிக்க ஒரு கட்டத்தில் பயம் வந்து விட்டது.. வீரபத்ரபிள்ளை தன்னை பற்றி கூறும் சம்பவங்கள் முதல் தடவையாக பிச்சை கேட்கும்போது விவரிக்கப்படும் நிகழ்வுகள் உச்சமாக ஒரு வாட்சை திருடி புகாரினுக்கு யாரும் இல்லாத ஒரு பகுதில் போய் படையல் வைப்பது கற்பனையின் மூலம் அதை நிகழ்த்தி பார்க்கும்போது மிக அதிகமான இறுக்கம், தொய்வு என் நிகழ்காலத்தின் மீது என்னை பயம் கொள்ள செய்தன. உங்கள் தீவிரமான நடையின் மேல் உண்மையில் புரியாமையின் கோபம் வந்து விட்டது . ஒருவரை பற்றி எழுதும் இந்த லெவல் லுக்கா உச்சத்துடன் எழுதுவது பயத்துடனும் வெறுப்புடனும் இப்போது சொல்வது என்றால் பக்குவமின்மையினுடனும் அந்த நாவலை அப்படியே தொலைந்து போனால் நன்றாக இருக்கும் என்று வைத்து விட்டேன் இனி இதை தொட கூடாது முடிந்த வரையில் ஜெயமோகனின் கட்டுரை சம்பந்தமான நூல்களை மட்டுமே வாசிப்போம் என்ற மனநிலைக்கு கொண்டு வந்து விட்டது

பிறகு சாட்சி மொழி , இன்று பெற்றவை என்று வாசித்து வந்தேன் ஆனால் உங்கள் கதைகளின் மேல் மதிப்பாலும் அதித விருப்பத்தாலும் அந்த மனநிலையை தொடர முடியவில்லை ஒரு மாறுதலுக்கு விசும்பு விரும்பி வாசித்தேன். இது எல்லாம் மறுபடியும் வாசிக்க போகும் ” பின் தொடரும் நிழலின் குரல் ” கான ஒரு மனநிலை தயாரிப்பா தெரியவில்லை மீண்டும் பின் தொடரும் நிழலின் குரல் – அருணாசலம் , ராமசாமி ,கதிர், வீரபத்ரபிள்ளை, புகாரின் , அன்னா லாறினா, கந்தசாமி , ஜோனி, ராமசுந்தரம் இவர்க்ளிலான சம்பவங்கள் மற்றும் உரையாடல்கள், அடுத்தடுத்த பக்கங்களுக்கு மெல்லவே மிக மெல்லவே நகர முடியும் படியானது ,ஒரு சாதாரண வாசகனான என்னால் நினைப்பதை மனதில் உள்ளதை கடிதம் மூலம் எழுதிவிட முடியாது மனதில் எண்ணங்களை (எதா இருந்தாலும்) உங்களை மாதிரி சொல்வடிவம் தந்து எழுத்தில் கொண்டுவருவது எப்போதும் சாத்தியபடாத ஓன்று ..

இந்த நாவலை பற்றி சொல்வடிவம் எனக்கு இது தான் மாற்று தரப்பினரையும் அவர்களது காரண காரியங்களையும் இந்த அளவுக்கு வலிமையுடன் முன்வைத்த படைப்பு ஓன்று சாத்தியமா (உங்களால் கூட இனிமேல் ) என்று .. வாசிக்கும்போது அடுத்ததடுத்த பக்கங்களின் கதாபாத்திரங்களின் மற்றும் சித்தாந்த ரீதியிலான வரும்தோறும் நியாயம் , சரி , நீதி என்று நினைக்கும் விஷியங்கள் என் மதிப்பீடுகள் மாறி மாறி சரிகின்றன மீண்டும் நிலை நிறுத்தபடுகிறது எதன் பொருட்டு மதிப்பீடு செய்வது என்று குழப்பமே எஞ்சி இறுதியில் கினியாழ்வின் சிறுகதையின் மூலம் அதி உன்னத மன எழுச்சி , மறுக்க முடியாத பெரும் மானுட அறம் படிகிறது மிக மிக சிலிர்ப்பான மகோ உன்னதமான சிறுகதை இது . இந்த சிறுகதை தங்களால் எழுதபட்டிருந்தால் தங்களின் ஆகச்சிறந்த சிறுகதை எப்போதும் என்னளவில் இதுவே என்பேன். ஆழ் நதியை தேடி இல் குறிப்பிடும் அழிகிரி சாமிக்கு “ராஜா வந்து இருக்கிறார் ” போல.. 

என் இலக்கிய வாசிப்பு பரந்து பட்ட ஓன்று அல்ல.. வேற்று மொழி நாவலாக இருந்தாலும் அதுவும் தமிழ் மொழிபெயர்ப்பின் பிறகே .. வாசிப்பின் வழியே ஒரு வித மதீப்பீடு சார்ந்து தன்னம்பிக்கை உண்டு நெறைய மறு வாசிப்பு வேண்டி இருக்கிறது காடு நாவலுக்கு அதன் மூலம் உங்களையே அந்த நாவலின் வாசிப்பு வழியே என்னால் தாண்டி போக முடியும் என்று சொல்ல வைக்கும் தன்னம்பிக்கை இது ;;அதுவே இதை எனக்கு சொல்ல வைக்கிறது ஆமாம் சார் “உலகத்தரமானவை என்று சொல்லப்படும் படைப்புகளின் வரிசையில் பின் தொடரும் நிழலின் குரல் நாவலுக்கு மிக கம்பீரமான இடம் உண்டு ” நீங்கள் எழுதியதற்காக இதை சொல்ல வில்லை வேறு யார் இதை எழுதி இருந்தாலும் மறுக்கமுடியாத மிக வலிமையான அற அழகியல் படைப்பு பின் தொடரும் நிழலின் குரல் 

போன முறை நீங்கள் பெங்களூர் வந்த போது துரதிர்ஷ்ட வசமாக சந்திக்க முடியாமல் போய் விட்டது. இந்நாவலை முடிக்கும் போது குறிப்பாக கினியாழ்வின் உயிர்த்தெழுதல் சிறுகதையை வாசித்து முடித்த பிறகு உங்களிடம் கேட்டு விட்டு உங்களை வந்து பார்க்க வேண்டும் என்று எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. இந்நாவலுக்கு பின்னால் உள்ள தங்களின் உழைப்பு என்னை பிரமிக்க வைக்கிறது. — 

Thanks & Regards dineshnallasivam 

அன்புள்ள தினேஷ் 

பிந்தொடரும் நிழல் என்னுடைய நாவல். ஆகவே அதில் உள்ள புனைகதைகள் நாடகங்கள், கவிதைகள், குறிப்புகள், அடிக்குறிப்புகள் அனைத்தும் என்னுடைய புனைவே. நன்றி. நானும் அந்தக் கதையை என்னுடைய மிகச் சிறந்த படைப்புக் கணமாகவே காண்கிறேன் 

ஜெ

No comments:

Post a Comment